தந்தை -மகன் கொலை வழக்கு ! குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

தந்தை -மகன் வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதலில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.கொரோனா காரணமாக காவலர் பால்துரை உயிரிழந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.இதனிடையே காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,சாட்சியங்கள், வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.