2021ல் ஐரோப்பாவில் 2,50,000 இறப்புகள்.. காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Air Pollution

ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது. நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் … Read more

கூகுள் தேடல் முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்கவேண்டும்- நீதி மன்றம்

கூகுள் தேடல்முடிவு தவறு என நிரூபித்தால், கூகுள் அந்த தரவுகளை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதி மன்றம் தெரிவித்துள்ளது. உலகில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடல் தளமாக கூகுள் தேடுதளம் இருக்கிறது. யாருக்கு எந்த தகவல் வேண்டுமானாலும் கூகுளில் தேடினால் அது உடனடியாக கிடைக்கும், மேலும் சரியானதாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதி மன்றம், கூகுளின் தேடல் முடிவுகள் தவறானது என நிரூபிக்கும் பட்சத்தில் கூகுள் நிறுவனம், அந்த தரவுகளை நீக்கவேண்டும் என … Read more

12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழுஅனுமதி..!

12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பல நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே மாதம் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள … Read more

ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்கப்படும் – ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு..!

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய கூட்டமைப்பு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது.  கொரோனாவால் உலகமே அஞ்சி இருக்கும் நிலையில் தடுப்பூசியை மட்டுமே உலக மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில், வளர்ச்சியடைந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரித்து வழங்கி உதவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. ஏழை நாடுகளுக்கு முழுமையாக தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. … Read more

#BREAKING : தெற்காசியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.65 மில்லியன் டாலர் நிதியுதவி.!

தெற்காசியாவில்  குறிப்பாக பங்களாதேஷ், இந்தியா மற்றும் நேபாளத்தை பாதித்த கடுமையான வெள்ளத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.65 மில்லியன் டாலர் உதவி நிதியை வழங்க உள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷை மிகவும் சேதப்படுத்திய ஆம்பான் சூறாவளி உள்ளிட்ட தொடர்ச்சியான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதற்காக  இந்த  நிதி உதவியை வழங்க உள்ளது என டாக்காவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் வெள்ளத்தால் சுமார் 17.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், கால்நடைகள், விவசாய நிலங்கள் … Read more

மூன்றரை ஆண்டு அரசு திணறி வந்த பிரக்சிட் மசோதா நிறைவேற்றம் .!ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதி.!

கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என இங்கிலாந்து மக்கள் வாக்களித்தனர். சமீபத்தில் போரிஸ் ஜான்சன் ஆட்சியை கலைத்து மீண்டும் பிரதமர் ஆனார். அவர் மேற்கொண்ட தொடர் முயற்சியால் பிரக்சிட் மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இங்கிலாந்து அரசியலில் நிலவி வந்த மூன்றரை ஆண்டு பிரச்சனைக்கு நேற்று முன்தினம் தீர்வு காணப்பட்டது.கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என இங்கிலாந்து … Read more