சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு – TNEA அறிவிப்பு

பொறியியல் படிப்புகளில் சேர சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு என அறிவிப்பு B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்கள் யாரேனும், இதுவரை நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காவிட்டால் வரும் 12-ம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என்று TNEA (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை) அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர பள்ளிகள் வாயிலாகவும், சிறப்பு மையங்கள் மூலமாகவும் கடந்த 27ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதன்பின், பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக 1 … Read more

பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிப்பு!

பொறியியல் கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு!

நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டம். ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீட் முடிவுக்கு பின் பல மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது. எனவே, விரைவில் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு செய்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு. பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல்  படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து, 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளையுடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் … Read more

#Breaking:சற்று முன்…BE கலந்தாய்வு – தொடங்கியது ஆன்லைன் விண்ணப்ப பதிவு;இங்கே விவரம்!

தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.இந்நிலையில்,பொறியியல் கல்லூரிகளில் பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் பதிவு முறை தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்  https://www.tneaonline.org/  என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.குறிப்பாக,அரசுப்பள்ளி,தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்,மேலும்,இதற்காக 110 சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, ஜூலை 20-31 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதனிடையே,ஜூலை 22 ஆம் தேதி … Read more

#BREAKING : பொறியியல் மற்றும் பாலிடெக்னீக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு…!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு.  அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. B.E.,B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 … Read more

பொறியியல் கலந்தாய்வில் வருகிறது மாற்றம் – சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை என அமைச்சர் தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது. அப்போது, கேள்வி – பதில் நேரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருவதாக தெரிவித்தார். ஆன்லைன் கலந்தாய்வில் … Read more

“ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை” – அமைச்சர் பொன்முடி

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி- பதில் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக உள்ளன. 2022-2023-ஆம் கல்வியாண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி … Read more

#குட் நியூஸ்: இன்ஜினீரிங்கில் புதியதாக சேர்க்கப்பட்ட பிளம்மிங்.! எந்தெந்த பிரிவுக்கு தெரியுமா.?!

இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனங்கள் விரைவில் பிளம்பிங் படிப்பு. இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தும் AICTE அமைப்பு தற்போது புதியதாக ஒரு பாடத்தை சில முக்கிய இன்ஜினீரிங் பிரிவில் சேர்த்துள்ளது. அதனை பொறியியல் மற்றும் கட்டிடக்கலை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது,  பிளம்பிங் தான் அந்த கூடுதல் பாடம். அதனை மாணவர்கள் விருப்ப தேர்வின் படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த விருப்ப தேர்வானது, ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் பிரிவுக்கும், மெக்கானிக்கல் … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள் – துணைவேந்தர் உறுதி!

பொறியியல் செமஸ்டர் தேர்வில் எளிமையான கேள்விகள் கேட்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் உறுதி. ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என தெரிவித்தது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளது. B.E., B.Arch., … Read more