அடுத்த 24X7: 15 மாவட்டம்- இடிடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!வானிலை தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலப் பகுதிகளிலிருந்து இன்று முதல் விலக தொடங்குகிறது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, … Read more

வேலூரில் மாவட்ட ஆட்சியரால் மாற்றப்பட்ட பால் விற்பனை செய்யும் நேரம்!

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக  இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து கடைகள் ஆலயங்கள், கல்விக்கூடம் என எல்லாமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால், அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 6 மணி முதல் 8 மணி வரை காலையிலும், 5 மணி முதல் 7 மணி வரை மாலையிலும் ஏற்கனவே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. … Read more

“போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறை”மகளிர் நீதிமன்றம் அதிரடி..!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிதம்பரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர், தீர்த்தம்பாளையம் என்ற கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராமு என்பவரது மகளான இரண்டரை வயதுச் சிறுமியை பழனிச்சாமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கைது செய்யப்பட்டார்.   இந்த வழக்கை ஓராண்டு காலமாக விசாரித்து வந்த சிதம்பரம் மகளிர் … Read more

திருப்பூர் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு..!!!நோய் தாக்கும் அவலம்..!!!

திருப்பூர்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி சிகிச்சைக்கு, போதியளவு தடுப்பூசி மருந்து இல்லாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், சமீப நாட்களாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை விரட்டுகின்றன. குறிப்பாக, நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கி ஓடும் பள்ளிக் குழந்தைகளை துரத்திச் சென்றுகடிக்கின்றன. நாய்க்கடிக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தான் உகந்தது என்ற … Read more

நேற்று தமிழகத்தில் பரவலாக மழை..!!

நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரலவாக மழை பெய்தது சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூரில் ஊத்துப்பேட்டை,பெரியபாளையம்,பொன்னேரி,செங்குன்றம்,மாதவரம் ஆகிய பகுதிகளிலும் திருவண்ணாமலை வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்  

சேலம் மாவட்டத்தில் தீ விபத்து!!

சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள  வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திடிரென  பிடித்த தீ 4 மணி நேரமாக எரிந்து வருகின்றது. தீ பிடித்த உடன் தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே  10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50  தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.   மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.