மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலின் உடல் அடக்கம் செய்யும் பணிகள் தீவிரம்!

வெற்றிவேலை உடல் அடக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்ற நிலையில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலின் உடல் அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, மக்கள் அஞ்சலி செலுத்திய பின், ஓட்டேரி மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

உலக அளவில் 11 லட்சத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை!

உலக அளவில் 11 லட்சத்தை கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலக … Read more

உயிருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர்! தம்பியின் இரக்கமற்ற செயலால் பரிதாபமாக பலியான அண்ணன்!

உயிருடன் ஃபிரீஸரில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சேலம் மாநகராட்சி கந்தம்பட்டி அருகே வசித்து வருபவர் சரவணன்(70). இவர் அவரது அண்ணனான பாலசுப்பரமணிய குமார் என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி, இறந்தவர்களின் உடலை வைக்கும் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். இந்நிலையில், பாலசுப்பிராமணிய குமாரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த பின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, குளிர்சாதன பெட்டி உரிமையாளர்கள், பெட்டியை எடுக்க வந்துள்ளனர். அங்கு வந்த பணியாளர்கள், பெட்டிக்குள் முதியவர் உயிருக்கு போராடிக் கொண்டு … Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மலையாள கவிஞர் காலமானார்!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மலையாள கவிஞர் காலமானார். பிரபல மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்கள் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த நிலையில், திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது 94. இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் கவிதை, சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரைகள் உட்பட பல படைப்புகளை எழுதிய நிலையில்,  பத்மஸ்ரீ, கேந்திரா சாகித்ய அகாடமி என பல விருதுகளை பெற்றுள்ளார் … Read more

உலக அளவில் 11 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

உலக அளவில் 11 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் … Read more

முதல்வரின் தாயார் காலமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – விஜயகாந்த்

முதல்வரின் தாயார் காலமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி, உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, … Read more

16-வது பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்த பரிதாபம்!

16-வது பிரசவத்தின் போது தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழப்பு. மத்தியபிரதேசம் மாநிலம், தாமோ மாவட்டத்தின் பதாஹிர் கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரானி (45). இவருக்கு 15 குழந்தைகளை பெற்றேடுத்த நிலையில், 4 ஆண்குழந்தையும், 4 பெண் குழந்தையும் மட்டுமே உயிருடன் உள்ளனர். மீதம் 7 குழந்தைகளும் பிறந்து சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்களில் இறந்துவிட்டனர். இந்நிலையில், இப்பெண் தனது 16-வது பிரசவத்திற்காக, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்று ஆண் குழந்தை … Read more

புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை காணவில்லை! உறவினர்கள் போராட்டம்!

புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை காணவில்லை என உறவினர்கள் போராட்டம்.  பீகார் மாநிலம், பார்சோய் அடுத்த அபாத்பூர் பகுதியை சேர்ந்த மங்கலு(65) என்ற நபர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, கிராமத்திற்கு அருகிலுள்ள கல்லறையில், அவரது உடல் அவர்களது குடும்ப வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த நாள், மங்கலுவின் மகன் முகமது பைக் அவரது தந்தையின் கல்லறைக்கு ஃபாத்திஹா துவாவை படிக்க சென்றுள்ளார். அப்போது அவரது தந்தையை புதைத்த இடத்தில் மண் … Read more

உலக அளவில் கொரோனா பாதிப்பு 3 கோடியே 77 லட்சத்தை கடந்தது!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம்.  முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலகளவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 37,746,051 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,081,435 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,28,347,330 பேர் குணமடைந்து … Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் விபரம்.  முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியிருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை உலக அளவில், 37,119,547 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,072,825 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த … Read more