பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மலையாள கவிஞர் காலமானார்!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மலையாள கவிஞர் காலமானார்.

பிரபல மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்கள் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த நிலையில், திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது 94.

இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் கவிதை, சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரைகள் உட்பட பல படைப்புகளை எழுதிய நிலையில்,  பத்மஸ்ரீ, கேந்திரா சாகித்ய அகாடமி என பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.