நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் விபரம். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியிருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை உலக அளவில், 37,119,547 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,072,825 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து, 27,902,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.