இந்திய சிங்களை மிஞ்சிய பெண் சிங்கம்…!சர்வதேச அளவில் கர்ஜிக்கும் இந்திய சிங்கங்கள்..!!!!பலே பலே மார்தட்டும் மக்கள்..!!!

இந்திய கிரிக்கெட் சிங்கள் சர்வதேச அளவில் கர்ஜிக்கின்றனர்.இந்திய சிங்களான விராட், ரோகித், மித்தாலி ராஜ் அதிரடியில் ஆடிபோய் உள்ளது கிரிக்கெட் வட்டாரம். மேற்கிந்திய தீவுகளில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்று  தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. பெண் சிங்கங்கள் இதற்கு முன் உள்ள போட்டிகளில் 2 லும் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் கர்ஜித்த பெண் … Read more

மகளிர் மட்டும்….இனிமேல் நாங்கள் தான்….ரோஹித், விராட்டை விரட்டிய மித்தாலி ராஜ்…!!

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மித்தாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்தி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில்… மித்தாலி ராஜ் 2283 ரோஹித் … Read more

அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்…!!

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் அரைஇறுதியை உறுதி செய்தது. 10 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) இந்திய அணி, அயர்லாந்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த அயர்லாந்து கேப்டன் லாரா டெலனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி … Read more

‘பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்’கேப்டன் விராட் கோலி அறிவுரை…!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் 20 ஓவர் தொடர் நடக்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி மும்பையில் இருந்து இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. இதையொட்டி … Read more

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்….இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்….!!

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. 10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் … Read more

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது….!!

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜிம்பாப்வே – வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 ரன்) இரட்டை சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் … Read more

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி…!!

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன. பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 … Read more

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? – 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்…!!

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த … Read more

இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு….!!

இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டார். ரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைந்து 16-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்கும் முதலாவது 4 நாள் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் … Read more

வீராட் கோலி தொடர்ந்து முதலிடம்….!!

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் வீராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 899 புள்ளிகளுடன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். துணை கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார். 3-வது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த ரோஸ் டெய்லரும், இங்கிலாந்தின் ஜோய் ரோட் 4-வது இடத்திலும் பாகிஸ்தானின் பாபர் அசாம் … Read more