மருத்துவ ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.!

மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலர் தங்கள் உயிரையும் துட்சமென மதித்து பொதுமக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றும் ஊழியர்களை நாட்டில் சில இடங்களில் பொதுமக்கள் தாக்கும் அறியாமை அவல நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. சென்னையில் … Read more

நாளை புதுச்சேரியில் முதல்வர் , எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை

நாளை புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது. இந்நிலையில் தான் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்  புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது,நாளை புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மல்லாடி … Read more

15,000 கோடி நிதி ஒதுக்கீடு.! 7,774 கோடி அவசரகால தேவைக்காக விடுவிப்பு.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. அவரச தேவைக்காக 7,774 கோடி ரூபாயை விடுவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நோய் தொற்று பரவலை தடுக்கவும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. … Read more

விமான போக்குவரத்து அமைச்சக ஊழியருக்கு கொரோனா தொற்று .!

கடந்த 15-ம் தேதி வரை அலுவலகத்தில் பணிபுரிந்த விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டிருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், விமான போக்குவரத்து துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா … Read more

காற்றில் பறக்கும் ஊரடங்கு.! டெல்லி சந்தையில் அலைமோதும் வாகன கூட்டம்.!

கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும், பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க நெருக்கமான விவசாய சந்தைகளை அகற்றிவிட்டு வேறு விசாலமான இடங்களில் சந்தைகளை மாநில அரசுகள் அமைத்து தருகின்றன அப்படி … Read more

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,உயிரிழப்பு,குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.இதற்குஇடையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என்றும்  … Read more

உண்மையான ஹீரோ இவர் தான் – விஜயகாந்தை புகழ்ந்த பிரபல நடிகர்!

மக்களுக்காக தன்னலம் பாராது உழைக்கும்  சமூக வலைத்தளங்களில் மட்டும் கடவுளாக மதிக்கும் மனிதரால், அவரது உடலை அடக்கம் செய்ய கூட இடம் தராத மனிதர்களும் இந்த உலகில் தான் வாழுகிறார்கள். அண்மையில் சென்னை மருத்துவர் சைமன் கொரோனாவால் இறந்ததால் அவரை தங்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய சென்னை வேலங்காடு மக்கள் தடுத்ததால் நடிகர் விஜயகாந்த் தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை கொரோனாவால் இருப்பவர்களை அடக்கம் செய்ய ஒதுக்கினார். இது குறித்து விஜயகாந்தை பலரும் பாராட்டி … Read more

குட் நியூஸ் : இனி இந்தியாவில் வாரத்திற்கு 5,00,000 ரேபிட் டெஸ்ட் கருவி உற்பத்தி : SD Biosensor

தென் கொரியாவைச் சேர்ந்த SD Biosensor என்ற நிறுவனம் ஹரியானாவில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது .  இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் உற்பத்தி தொடக்கம்  வாரத்திற்கு 5,00,000 ரேபிட் டெஸ்ட் உற்பத்தி  கடந்த 24 மணிநேரத்தில் 1383 கொரோனா  கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை நெருங்குகிறது . இதுவரை  640 பேர் பலியாகியுள்ளனர் 3,870 குணமடைந்துள்ளனர் . கடந்த 24 … Read more

உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவ சங்கத்துடன் ஆலோசனை

இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி மூலம் உரையாடினார் . கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சுகாதாரப்பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.பணிபுரியும் பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் அடையாள போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.இதனால் இன்று நாடு முழுவதும் பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு மருத்துவமனைகளில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துடன் மத்திய … Read more

என் வாழ்க்கையில் நான் தனிமையில் வசித்ததே இல்லை! கவலை தெரிவித்த பிரபல நடிகை!

கொரோனாவால் தனிமையில் உள்ள நடிகை ஸ்வேதா பாசு, மனநல மருத்துவரிடம் சிகிச்சை. இந்தியா முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும், பிரபலங்கள் முதல் பாமர மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி தான் உள்ளது. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் இந்தி … Read more