‘பி.எப்.வட்டி விகிதம் குறைப்பு’ – மத்திய அரசு.!

பி.எப்.வட்டி விகிதம் குறைப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.65% லிருந்து 8.50%ஆக குறைத்தது மத்திய அரசு. தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு, எவ்வளவு வட்டி அளிப்பது என்பதை, ஒவ்வொரு ஆண்டும், சி.பி.டி., எனப்படும், மத்திய அறங்காவலர் வாரியம் நிர்ணயம் செய்யும். கடந்த நிதியாண்டில், வட்டி விகிதம், 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.65% லிருந்து 8.50%ஆக குறைத்தது மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தாண்டுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும்படி, அறங்காவலர் வாரிய … Read more

கொரோனா எதிரொலி..! பள்ளிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!

கொரோனா வைரஸ் குறித்து பள்ளியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில்இருமல் , தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உடல்நிலை குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது … Read more

தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை.!

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதனிடையே அமைச்சகங்களுக்கும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கூறுகையில், பல்வேறு அமைச்சகங்கள் சுவர் காலண்டர்கள், மேஜை காலண்டர்கள் மற்றும் டைரிகளை என தனித்தனியாக அச்சிட்டு வருகின்றன. இதன் மூலம் இரட்டை பணிகளும், அதிக நிதி செலவும் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். எனவே இந்த பணிகள் அனைத்தும் தகவல் தொடர்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ள … Read more

Breaking: இந்தியாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ்..!

டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.  இவர்களில் டெல்லியை சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று விட்டு திரும்பியதாகவும் ,  தெலுங்கானாவில் பாதிப்புக்கு ஆளானவர் சமீபத்தில் தான் துபாயில் இருந்து திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த ஒரு மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது  அவர் குணமாகிவிட்டார் … Read more

விவசாயிகளுக்காக வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு..!

வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் சமீபத்தில் கடுமையான விலை உயர்வை பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.150-க்கு மேல் விற்பனையானது.அதைத் தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தட்டுப்பாட்டை போக்கி நிலைமையைச் சமாளிக்க எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து  மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. தற்போது வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான … Read more

கொரோனா வைரஸ்.! சிங்கப்பூர் செல்வதை தவிர்க்கவும் மத்திய அரசு எச்சரிக்கை .!

மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதையெடுத்து கொரோனா வைரஸ் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரதுறை, விமானப் போக்குவரத்துத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகங்களின் செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்தியர்கள் … Read more

மூடும் நிலைமையில் தவிக்கும் வோடஃபோன்.! மூடினால் நேரும் ஆபத்து.!

ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு  92,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் கடந்த  2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வந்தது. இந்த நிறுவனம் வந்த பிறகு மற்ற நிறுவனங்களுக்கு  பெரும் நஷ்டம் ஏற்பட்டது அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் சில நிறுவனங்கள் … Read more

ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்.!

உச்ச நீதிமன்றம் உத்தரவை முன்னிட்டு ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் (adjusted gross revenue) தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. பின்னர் பாக்கித்தொகையை நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏர்டெல் … Read more

#Breaking: அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு.!

நெய்வேலியில் உள்ள என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிந்ததால், அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனல் மின் நிலையம் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், 2022-ம் ஆண்டுக்குள் படிப்படியாக மூடவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகள் என்பதால் மூட உத்தரவு. இந்த நிலையில் முதலாவது அனல் மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது என … Read more

#Breaking:சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர தடை.!

நேற்று முன்தினம் சீன நாட்டினர் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் செய்ய  இந்திய தூதரகம் அறிவித்தது. இன்று கொரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர  தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர  தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்து உள்ளது. நேற்று முன்தினம் சீன நாட்டினர் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு … Read more