#4YearsOfAsuran: வெற்றிமாறனின் தரமான படைப்பு! தனுஷின் அசுரன் வசூல் எவ்வளவு தெரியுமா?

Asuran

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் “பூமணியின் வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு தழுவி எடுத்திருந்தார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து. இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் ஆகியோர் கூட்டணியில் … Read more

அசுரன் பட நடிகையின் உயிருக்கு ஆபத்து.? வைரலாகும் பிரபல இயக்குனர் பதிவு.!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இவரின் உயிருக்கு ஆபத்து என பிரபல இயக்குனர் சனல் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, அவரின் … Read more

தனுஷின் வாத்தி திரைப்படத்தில் அசுரன் சிதம்பரம்.?

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று “வாத்தி”. இந்த படம் தமிழ் -தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறது. இப்படத்தை ‘தோழி ப்ரேமா’, ‘ரங் த’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில் ‘வாத்தி’ எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று … Read more

அசுரன் பின்னணி இசையை 8 நாட்களில் முடித்த ஜிவி பிரகாஷ்.!

அசுரன் திரைப்படத்தின் பின்னணி இசையை அமைக்கும் பணியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் 8 நாட்களில் முடித்துள்ளாராம். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தில் நடிகர் பசுபதி, மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, கென் கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

தனுஷை “அசுரன்” என்று கூறிய மாஸ்டர் குட்டி பவானி..!

மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய்சேதுபதியாக நடித்த மகேந்திரன் ரசிகர் ஒருவர் தனுஷை பற்றி கேட்டதற்கு அசுரன் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் … Read more

ட்வீட்டரில் தனது பயோவை மாற்றிய தனுஷ்! எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா?

அசுரன் திரைப்படம் பல சிறப்புகளை பெற்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பயோவை ASURAN/actor  என்று பெருமையுடன் மாற்றியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு … Read more

கோல்டன் குளோப் விருது…. தேர்வாகிய 2 தமிழ் படங்கள்..!

கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் சூரரைப்போற்று மற்றும் அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர். பிரபலமான விருதான ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக திரைக்கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு விருதாக இருப்பது கோல்டன் குளோப் விருதுகள் என்றே கூறலாம், மேலும் கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் 2 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மற்றும் … Read more

மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி – அசுரன் தனுஷ்..!

51 வது கோவா சர்வதேச திரைப்பட விருது விழாவில் அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளதால் நடிகர் தனது தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கோவா சர்வதேச 51 வது திரைப்பட விருது விழா வருகின்ற ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பட்டியலில் இடம்பெற்ற படங்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அசுரன் தேர்வு இந்த பட்டியலில் 23 … Read more

சர்வதேச விருது விழாவிற்கு தேர்வான அசுரன்..!

51 வது கோவா சர்வதேச திரைப்பட விருது விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. 51 வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, நிறைவு நிகழ்ச்சியும் குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும் என்றும் திரைப்பட விழா ஆன்லைன் மூலம் காணலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். கோவா சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி 24-ம் தேதி … Read more

தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு.!திரையிடப்படும் மெகா ஹிட் படங்கள்.!

தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் பழைய மெகா ஹிட் படங்கள் தீபாவளிக்கு திரையிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து புது திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் … Read more