மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது..!

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தொடங்கியது. அரசு மருத்துவக்கல்லூரியில் 4,349 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 இடங்கள் நிரப்ப கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களை 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. … Read more

மருத்துவ மேற்படிப்பு – ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு உறுதி!

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதி அளித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்கப்படும் என்றும்  உயர்சாதி … Read more

சித்தா,ஆயுர்வேதம்,ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது. நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி,மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை https://www.tnhealth.tn.gov.in/  என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் … Read more

இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விநியோகம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஆன்லைன் மூலம் விநியோகம். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958  இடங்களும், பல் மருத்துவ … Read more