கந்து வட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக 14 கட்சிகளின் முற்றுகைப் போராட்டம்…!

கந்துவட்டி உயிரிழப்புக்கு நீதிகேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று (அக் 27) சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ்,மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, CPl(ML), SDPI, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர்பேரவை, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், IUML, TMJK, DYFI, SFI என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி … Read more

திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…!

திருநெல்வேலி: நேற்று மாலை பாளை மார்க்கெட் மைதானத்தில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிம் (எம்)) மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த ஆர்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜகுரு உட்பட பலர் கலந்து கொன்றனர். மேலும் இன்று அனைத்து கட்சி கூட்டம் காலை சிபிஐ(எம் ) அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

தீக்குளித்ததில், படுகாயமடைந்தவர்களை நேரில் சென்று உடல் நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர் நான்கு பேர் தீ குளித்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த போது.உடன் நெல்லை மாநகர செயலாளர் திரு. ALS. லட்சுமணன் MLA அவர்கள்,நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. ALB.தினேஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்

நெல்லையில் பரபரப்பு : குடும்பத்துடன் தீக்குழிப்பு : கலெக்ட்டர் அலுவலகம் முன்

 நெல்லை மாவட்டம் தென்காசியருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து இவர் மனைவி சுப்புலெட்சுமி மற்றும் மகள்கள் சாருன்யா, பரணிகா ஆகியோர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதனை விசாரிக்கையில் இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி ஒரு கந்துவட்டிகாரரிடம் ருபாய் 1,5,000 கடனாக வாங்கியுள்ளார். இதனை மாதம் தோறும் தவணை முறையில் ருபாய் 2,30,000-ஆக அடைத்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த கந்து வட்டி கும்பல் இதுவரை வட்டி மட்டுமே … Read more

பிஜேபி ஸ்லீப்பர் செல் அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன் பிஜேபியில் இணைந்தார்….!

அதிமுகவின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளரும்,முன்னாள்  அமைச்சர் நயினார்நாகேந்திரன் உட்பட பல்வேறு கட்சியினர் பிஜேபியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நேற்று திருநெல்வேலி பாளை ஜவகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிஜேபி கட்சியில் இணைந்தார்கள்.

டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகை.

டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகையீட்டு போராட்டம் நடத்தினர். பாளை தாலுகா செயலாளர் கருணா தலைமை தாங்கினார், நெல்லை தாலுகா செயலாளர் அசோக், தலைவர் நம்பிகுமார், பொருளாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர் ராஜகுரு, துணைச் செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் பிரபாகரன், பாளை தாலுகா பொருளாளர் ஜான், கௌதம், ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு நிதி … Read more

பாலியல் தொழிலில் விரோதம் பெண்ணை கொன்ற தோழி சிக்கினார்

சின்னமனூர்: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (27). இவரது நண்பர் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராஜா (24). இருவரும் அடிக்கடி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சென்று வந்துள்ளனர். அப்படி செல்லும் போது உத்தமபாளையம் கோம்பையை சேர்ந்த மகாலெட்சுமியிடம் (47) சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது. கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்த வசந்தி (47) கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அவரும், மகாலெட்சுமியும் தோழிகள். தொழிலில் … Read more

நெல்லையில் ஆர்ப்பாட்டம்; செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது … Read more

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் – 2 பேர் உயிரிழப்பு;நெல்லையில் பரபரப்பு..!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நடுவக்குறிச்சியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அர்ஜூனன், லூர்து பிரின்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருநெல்வேலியில் ம.சு பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருநெல்வேலி: ம.சு பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து, ம.தி.தா இந்து கல்லூரியில் SFI சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது , போராட்டத்தில் மாநகர செயலாளர் சிவா மற்றும் கிளை செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் SFI செயலாளர் முருகேசன் ,வில்சன் உட்பட பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.