கந்து வட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக 14 கட்சிகளின் முற்றுகைப் போராட்டம்…!

கந்துவட்டி உயிரிழப்புக்கு நீதிகேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று (அக் 27) சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ்,மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, CPl(ML), SDPI, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர்பேரவை, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், IUML, TMJK, DYFI, SFI என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இராஜகுரு,இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வில்சன் ஆகியோர் பங்கெடுத்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.