திடீர் திருப்பம்!! பிரதமர் நரேந்திர  மோடியின் தமிழக வருகை தேதி மாற்றம்!!

9

பிரதமர் நரேந்திர  மோடியின் தமிழக வருகை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு பதில் மார்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 10 ஆம் தேதி) தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் .ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு வந்தார்.

பின்னர் கர்நாடக மாநில பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர  மோடியின் தமிழக வருகை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு பதில் மார்ச் 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தகவல் தெரிவித்துள்ளார்.