ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு…! ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு …!

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.அதைத்தொடர்ந்து  தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு செப்டம்பர் 22 ஆம் தேதி மாலை தூத்துக்குடி வந்தடைந்தனர்.

இதன் பின்னர்  செப்டம்பர் 23 ஆம் தேதி  ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை தொடங்கினார்கள்.இதன் பின்னர் ஸ்டெர்லைட் குறைகள் தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு  அரசு பாலிடெக்னிக்  கல்லூரியில் நடைபெற்றது. இதன் பின்னர் சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில் நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம்  கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதைவிசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவிற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதாவது  1 மாதம் கூடுதலாக கால நீட்டிப்பு வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால்  நவம்பர் 30 வரை ஓய்வு பெற்ற நீதிபதி அகர்வால் குழு ஆய்வு செய்ய அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

1 hour ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

2 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago