ஸ்டாலினின் பெயரை முதலில்  மாற்ற வேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலினின் பெயரை முதலில்  மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில்

By venu | Published: Sep 13, 2019 10:10 AM

ஸ்டாலினின் பெயரை முதலில்  மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படுகிறது,  தமிழுக்கு பேராபத்தே திமுக தான் குறிப்பாக ஸ்டாலின். முதலில் இவருடைய பெயரை மாற்ற வேண்டும்.ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா ? என்று கேள்வி எழுப்பினார். சீத்தலை சாத்தனர் போன்ற தமிழ் புலவர்கள் பெயரை அவர் மாற்றிக்கொள்ளலாம். முதலில் உங்கள் பள்ளியில் இந்தி கற்றுக்கொடுபதை நிறுத்துங்கள்.மலேசிய நாட்டில் வேலைக்காக சென்று சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.வெளிநாட்டிற்கு செல்பவர்கள், தமிழக அரசின் ஆலோசனையை பெற்று செல்ல வேண்டும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc