டாடா(TATA) கார் நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள்.!!

 

நிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

டாடா டியாகோ(tata tiago) விற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

டாடா டீகோர் (tata tigor)டாடா டீகோர் காருக்கு ரூ.32,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டமும், ரூ.1 லட்சம் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டமும் உள்ளது. டாடா டீகோர் கார் 84 பிஎச்பி திறன் வாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 69 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

டாடா ஸெஸ்ட்(Tata Zest) டாடா ஸெஸ்ட் காருக்கு அதிகபட்சமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்(tata safari storme) டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.80,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். இந்த மாடலுக்கு ரூ.1க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுகளை பெறும் வாய்ப்புடைய பரிசுத் திட்டமும் உள்ளது.

டாடா ஹெக்ஸா(Tata Hexa) டாடா ஹெக்ஸா காருக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பை இப்போது பெற முடியும். ஒரு ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் திட்டத்துடன் கிடைக்கிறது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Special offers for Tata (TATA) car

 

Dinasuvadu desk

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

2 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

3 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

3 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

3 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

4 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

4 hours ago