40 அதிமுக எம்எல்ஏக்கள் தயார்.! அப்பாவு கொடுத்த ஷாக்.! நிதானித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இன்று சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் நடந்தவை என பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறினார்.

அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி களோபரமானது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து அதிமுக ஆதரவை பின் வாங்கினர். அந்த சமயம் டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார்.

நெருங்கும் தேர்தல்.. அதிமுக வியூகம் என்ன.? இன்று முக்கிய ஆலோசனை.!

அப்போது எனக்கு ஒரு நண்பர் தொடர்புகொண்டு , 40 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்து எங்கே செல்வது என தெரியாமல் இருந்து வருகின்றனர். அவர்களை திமுக பக்கம் வரவழைத்து நாம் ஆட்சியை கைப்பற்றலாம் என கூறினார். இந்த தகவலை நான் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன்.

இந்த விஷயம் பற்றி சிறிது யோசித்து விட்டு, இந்த 40 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நாம் ஆட்சியை பிடிக்க வேண்டாம். நாம் நேரடியாக மக்களிடம் செல்வோம். அவர்கள் வாய்ப்பளித்தால் ஆட்சி அமைப்போம். என கொள்கை பிடிப்போடு இருந்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் என பெருமை பொங்க கூறினார் சபாநாயகர் அப்பாவு.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.