#Breaking:ஒற்றைத் தலைமை விவகாரம் – தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றப்பயணம்? – சசிகலாவின் அதிரடி முடிவு!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.

இதனையடுத்து,ஓபிஎஸ் அணியினர் கடந்த 24-ஆம் தேதி டெல்லி விரைந்தனர்.அங்கு,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு அவர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து,ஓபிஎஸ் தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்து,நேற்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தின் அட்டவணை இன்று இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து,அவர்களின் ஆதரவை திரட்டி,ஒற்றைத் தலைமை  தீர்மானத்தை தடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும்,பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பினர் தன்னை அவமானப்படுதியதை தொண்டர்களிடம் முறையிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க தமிழகம் முழுவதும்  ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று தெரிகிறது.

இதற்கிடையில்,அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலாவும் இன்று முதல் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.நாளுக்கு நாள் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில்,சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும்,அதன்படி,இன்று காலை 11 மணி அளவில் திருத்தணி செல்லும் சசிகலா தொண்டர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Leave a Comment