#Shoking:3 ஆண்டுகள் மட்டுமே ரஷ்ய அதிபர் புடின் உயிருடன் இருப்பார் -உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புற்றுநோய் காரணமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை மேற்கோள் காட்டி தி இன்டிபென்டன்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.குறிப்பாக,69 வயதான புடின் பார்வையை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக,ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் UK-வில் வசிக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கர்பிச்கோவ் என்பவருக்கு அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:”வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் காரணமாக புடின் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம்.அந்த வகையில் அவர் தலைவலியால் அவதிப்படுகிறார்.அவர் தொலைக்காட்சியில் தோன்றும்போது, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைப் படிக்க,பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட காகிதத் துண்டுகள் தேவை.அவை மிகவும் பெரியவை, ஒவ்வொரு பக்கமும் ஒன்றிரண்டு வாக்கியங்களை மட்டுமே வைத்திருக்க முடியும்.அவரது பார்வை தீவிரமாக மோசமாகி வருகிறது” என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில்,தற்போது அவர் 3 ஆண்டுகள் மட்டுமே வாழ கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எவ்வாறாயினும்,ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,புடின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறும் ஊகங்களை மறுத்துள்ளார்.மேலும்,புடினுக்கு எந்த நோயையும் சுட்டிக்காட்டும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் செர்ஜி கூறியுள்ளார்.இதனிடையே,நடப்பு மே மாத தொடக்கத்தில்,புடினுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment