அருவா வேணும்னா எடுத்துருவேன்.! பத்திரிகையாளர்களை பதற வைத்த ஹரி.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து இருவரும் 6-வது முறையாக இணைவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும், படத்திற்கு அருவா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிறகு ஹரி அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார். இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், பிரியா பவானி சங்கர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ” அதில் ஒருவர் அருவா படத்தின் கதைதானா யானை திரைப்படத்தின் கதை என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஹரி ” அருவா படத்தின் கதை வேற யானை படத்தின் கதை வேற “அருவா”  இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை வேண்டுமென்றால் எடுத்துவிடலாம்” என கூறியுள்ளார்.

Leave a Comment