கத்தியால் குத்தி கொடூர கொலை செய்யும் விஜய் சேதுபதி.! வெட்டி தூக்கிய சென்சார்.!

அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் “விக்ரம்”.  இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த வசனத்தை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் , விஜய் சேதுபதி ஒருவர் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்யும் காட்சியில் வன்முறையை குறைக்கும் விதமாக காட்சியின் சுருக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் படத்தில் சில ஆபாச வசனங்கள் மியூட் செய்து படத்தில் 10 காட்சிகள்  கட் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விக்ரம் படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Leave a Comment