சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த 10,000 -க்கும் அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றம் – உ.பி அரசு அதிரடி!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒலி பெருக்கிகள் மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்படும் எனவும், ஒலி அளவு அதிகமாக வைத்து பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளும் அகற்றப்படும் எனவும் முன்னதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியாகியதை அடுத்து பல வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் ஒலி அளவை தாங்களாகவே குறைத்துக்கொண்டுள்ளனர்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 17 ஆயிரத்துக்கும் அதிகமான மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு அதிகாரிகளில் குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது முதல்வரின் உத்தரவை அடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களில் இருந்து 10,923 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal