ஐபிஎல் 2024 : பூரன் தலைமையில் பேட்டிங் செய்ய களமிறங்கும் லக்னோ ..! கிடைக்குமா அந்த முதல் வெற்றி ..?

ஐபிஎல் 2024 :  நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்  லக்னோவில் உள்ள பாரத ரத்னா மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய  முடிவு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி பந்து வீச தயாராக உள்ளது.

இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியடைந்து இந்த போட்டிக்கு திரும்புகின்றனர். மேலும், இரு அணி தரப்பினரும் சமநிலையில் இருப்பதால் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

லக்னோ அணியில் டாஸ் போடும் போது லக்னோ அணியில் கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக நிகோலஸ் பூரன் அணியின் கேப்டனாக செயல்பட்டு பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளார். கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய மட்டும் களமிறங்குவார் என்று அறிவித்திருந்தார்.

இந்த மைதானத்தில் அமைந்துள்ள பிட்ச் சாதகமாக இருப்பதால் இதில் முதல் பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் இன்றைய நிலையில் இரவு நேர ஆட்டத்தில் ஈரத்தன்மை அதிகரிக்கும் என்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கலாம் என்று கணிக்கபடுகிறது

லக்னோ அணி வீரர்கள் :

கே.எல். ராகுல், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.

இம்பாக்ட் வீரர்கள் :

ஆயுஷ் பதோனி (அல்லது) கௌதம்,

பஞ்சாப் அணி வீரர்கள் :

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர்.

இம்பாக்ட் வீரர்கள் :

அர்ஷ்தீப் சிங்

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.