பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

Annamalai: அண்ணாமலை, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு.

18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை, கடலூர் பாமக வேட்பாளரான திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பரப்புரை மேற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது