அரசியல் கட்சினர் பேனர் விவகாரம்… உச்ச நீதிமன்றம் விளக்க நோட்டீஸ்…!!

தமிழக அரசு பேனர்கள் வைப்பதை ஒழுங்கு படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தநிலையில், யானை ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சியினர் பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டுமென பொதுநல வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்த போது அரசியல் கட்சியினர் மலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் பேனர்கள் வைக்க தடை விதிப்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசு ,  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.