பொங்கல் பரிசு தடை….தமிழக அரசு கேவியட் மனு…!!

தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 1000 வழங்கலாம் என்றும் , வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.இதையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது .மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு , எந்த பொருட்களும் வாங்கவேண்டும் என்ற அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பொங்கல் பரிசை தடை செய்ய கோடரி யாராவது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல் தங்களின் தரப்பையும் கேட்க வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.