அதிமுக சார்பில் வரும் 18 முதல் 20-ம் தேதி வரை பொதுக்கூட்டம் …!

அதிமுக சார்பில் வரும் 18 முதல் 20-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், எம்ஜிஆர் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் வரும் 18 முதல் 20-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் .

வரும் 18-ம் தேதி பூந்தமல்லியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், பெரியகுளத்தில் துணை முதலமைச்சரும் பங்கேற்கிறார்கள்.வரும் 20-ம் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.