இரு மாநில தேர்தல் முடிவுகள்.! பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை.!

தேர்தல் முடிவுகள் வருவதை ஒட்டி பாஜக மூத்த நிர்வாகிகளுடன் டெல்லில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  

குஜராத் தேர்தல் சட்டசபை முடிவுகள் வெளியாகி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். குஜராத்தில் தொடர்ந்து 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்து வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இலுபறி இருந்து வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

இந்நிலையில், டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து இன்று மாலை தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரிந்தவுடன் டெல்லி பாஜக அலுவலகத்திற்கு சென்று பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment