பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை – தமிழக பாஜக தலைவர்  தமிழிசை

பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை. சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார்.நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment