லோக் ஆயுக்தா.!தமிழகத்தில் 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் …!உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்சநீதிமன்றம் தமிழகத்தில் 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
இந்த மசோதாவிற்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை கடந்த 2013 மத்திய அரசு இயற்றியது .இதை பின்பற்றியே தமிழக அரசின் லோக் ஆயுக்தா மசோதா அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 24 ஆம் தேதி) உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், லோக்ஆயுக்தா அமைக்கப்படாததற்கு தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.அதேபோல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து பிற்பகல் 2 மணிக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,தமிழகத்தில் 3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment