• ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • ஸ்டெர்லைட்_டை தொடர்ந்து நடத்த ஆலை நிர்வாகம் சந்து பொந்துக்கு செல்லாமல் இருக்க வேண்டும்

நேற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்ததை அடுத்து இந்த தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு வகையில் தீர்ப்பு குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது , 14 உயிர்கள் பறிபோய் 200 பேர் படுகாயம் அடைந்தவர்கள் அவர்களின் தியாகங்கள் எல்லாம் வீண் போகவில்லை என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது . இதை நான் வரவேற்கின்றேன்.இனிமேல் ஸ்டெர்லைட் ஆலை வழக்குகளையும் நாடி சந்து பொந்துகளில் தேடி ஆலை நிர்வாகம் இதற்கு மேலேயும் ஆலையை தொடர்ந்து நடத்த முயற்சி கூடாது என்பதை தமிழக அரசு ஆலை நிர்வாகத்திடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்லக்கூடாது என்று வற்புறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.