நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும் என முதல்வர் ட்விட். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இளைஞர், மகளிர், மாணவரணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் கட்சி தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜகவினர் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமத்துவம் – சமூகநீதி – பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட; சாதி – மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment