கொடுக்காப்புளியின் கொத்தான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

கொடுக்காப்புளியின் கொத்தான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

manila tamarind

கொடுக்காப்புளி -கொடுக்காப்புளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கொடுக்காப்புளி என்றாலே நம் பள்ளி பருவம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு இந்த கொடுக்காப்புளியை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். கொடுக்காப்புளி இனிப்பு ,புளிப்பு, துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளையும் கொண்டிருக்கும் . இதை ஒரு சில இடங்களில் கோண புளியங்காய் எனவும் கூறுவார்கள்.

கொடுக்காப்புளியில் நிறைந்துள்ள சத்துக்கள்:

விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் பி1, விட்டமின் பி2, விட்டமின் பி6 நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் ,பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

கொடுக்காப் புளியின் ஆரோக்கிய நன்மைகள்:

  • அதிக அளவில் விட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் .மேலும் காற்றின் மூலம் பரவும் வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கவும் செய்யும்.
  • பித்தப்பை சர்க்கரை கரைக்கும் தன்மை கொண்டது. மேலும் கல்லீரலில் மஞ்சள் காமாலை ஏற்படுவதையும் தடுக்கிறது.
  • கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் இது எலும்பு மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. மேலும் உள்  காயங்களினால் ஏற்படும் வலியை குறைக்கும் தன்மையும் கொண்டது.
  • வயிறு உப்பசம் ,அஜீரணம் ,மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளை நீக்குகிறது. இதில் உள்ள குவாஸ்டின் மற்றும் பிளேவனாய்டு  சத்துக்கள் இருப்பதால் குடலின் உட்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றி குடல் புண்களை ஆற்றுகிறது. மேலும் குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • உடல் எடை குறைப்பில் உடலில் உள்ள LDL என்கிற கெட்ட கொழுப்பை எரித்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது .இதனால் கொலஸ்ட்ராலின் அளவும் சீராக்கப்படுகிறது.
  • இதில் ஆன்டி  ஹைபர் கிளைசிமிக் பண்புகள் உள்ளதால் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.
  • தொண்டை வலி உள்ளவர்கள் கொடுக்காப்புளியை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலுறவினால் உண்டாகும் வைரஸ் தொற்றுகளிலும் இருந்து பாதுகாக்கிறது. ப்ராஸ்டேட் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
  • சரும ஆரோக்கியத்தை பொறுத்தவரை இதன் விதைகளை மைய அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு ,கரும்புள்ளி, மங்கு, முகச்சுருக்கம் போன்றவை குறையும்.

இந்த கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய கொடுக்காப்புளி என்ற கோணப் புளியங்காவை உண்டு அதன் ஆரோக்கியத்தை பெறுவோம். மேலும் அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை தவறவிடாமல் எடுத்துக்கொள்வோம். ஏனென்றால் இந்த இயற்கையானது நம் உடலுக்கு எந்த நேரத்தில் என்ன தேவையோ அதை தரக்கூடியது.

Join our channel google news Youtube