தமிழகத்தில் ஆண்டுகொண்டிருப்பது ஏடிஎம்கே அல்ல மோடிஎம்கே : சந்திரபாபு நாயுடு

11

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தலுக்கென அனைத்து விதிமுறைகளையும் விதித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேசுகையில், வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்றும், ஜெர்மனி , இத்தாலி , நெதர்லாந்து நாடுகளில் எல்லாம் வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மத்தியில் ஆட்சியமைப்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதான பங்காற்ற போகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்டாலினை முதலமைச்சராக பார்க்க தமிழக மக்கள் விரும்புவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆண்டுகொண்டிருப்பது ஏடிஎம்கே அல்ல மோடிஎம்கே என்றும் விமர்சித்துள்ளார்.