நட்சத்திர வீரர் காயம்! இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம்! ரசிகர்கள் கவலை!

82

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு நடக்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ ஆடுவது சந்தேகம் எனத்தெரிகிறது. ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது இவர் காயமடைந்தார்.

இதன் காரணமாக இரண்டு வாரம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் அவர் இந்த போட்டியில் ஆட மாட்டார் என்று தெரிகிறது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்