நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன் – மாணவியின் தந்தை

நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன் – மாணவியின் தந்தை

Default Image

இனி இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நிகழக்கூடாது என கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை உருக்கம்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு மாணவின் உடல் கொண்டு செல்லப்பட்டு, கடலூர் பெரியநெசலூரில் உள்ள வீட்டில் மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரியநெசலூரில் மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் நடைபெற்றது.

வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது. இதன்பின், பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாட புத்தகத்துடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடல் இரு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, 11 நாட்கள் கழித்து மாணவியின் ஆன்ம இளைப்பாறியது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தந்தை ராமலிங்கம், நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன். அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள். இனியும் இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது. என் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  என் மகள் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் மாணவியின் தந்தை ராமலிங்கம் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *