TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !

TATA WPL 2024 : மகளீருக்கான ஐபிஎல் தொடரின் 2-வது சீசன் கடந்த பிப்ரவரி- 23 ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் நேற்று டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியது.

Read More :- மகளிர் பிரீமியர் லீக்! டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன்

இந்த இறுதி போட்டி நிறைவடைந்த பிறகு நடைபெற்ற WPL 2024 தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு விருதுகளும் பரிசுத்தொகையும் வழங்கினார்கள். அதில் யார் யாருக்கு என்னென்ன விருதுகளும், பரிசுத்தொகையும் வழங்கினார்கள் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

WPL 2024 தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும், இரண்டாவதாக இடம்பெற்ற (ரன்னர் அப்) அணியான டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

IPL 2024 : புரூக்கை தொடர்ந்து டெல்லி அணிக்கு அடுத்த சறுக்கல் ..? என்கிடிக்கு பதிலாக இனி இவர் தான் !

WPL 2024 சீசனின் எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் :

ஜார்ஜியா வேர்ஹாம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 5 லட்சம்

WPL 2024 சீசனில் வளர்ந்து வரும் வீரர் :

ஸ்ரேயங்கா பாட்டீல் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 5 லட்சம்

WPL 2024 சீசனில் அதிக சிக்ஸர்கள் :

ஷஃபாலி வர்மா (20 சிக்ஸர்கள்) – டெல்லி கேபிட்டல்ஸ் – 5 லட்சம்

WPL 2024 பர்பிள் கேப் வெற்றியாளர் (அதிக விக்கெட்டுகள்) :

ஸ்ரேயங்கா பாட்டீல் (13 விக்கெட், 8 இன்னிங்ஸ்) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 5 லட்சம்

Read More :- IPL 2024 : ஒரே அணியில் ரெண்டு மலிங்கா ? ஐபிஎல்லில் மிரட்ட போகும் சிஎஸ்கே !

WPL 2024 ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர் (அதிக ரன்கள்) :

எலிஸ் பெர்ரி (347 ரன்கள், 9 இன்னிங்ஸ்) –  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 5 லட்சம்

WPL 2024 மிகவும் மதிப்புமிக்க வீரர் :

தீப்தி சர்மா (295 ரன்கள், 10 விக்கெட்) –  யூபி வாரியர்ஸ் – 5 லட்சம்

WPL 2024 கேட்ச் ஆஃப் தி சீசன் : 

சஜீவன் சஜனா – டெல்லி கேபிட்டல்ஸ்

WPL 2024 Fairplay (நியாயமான விளையாட்டு) விருது வென்ற அணி : 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 5 லட்சம்

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment