IPL 2024 : ஒரே அணியில் ரெண்டு மலிங்கா ? ஐபிஎல்லில் மிரட்ட போகும் சிஎஸ்கே !

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது இதில் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஆன சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22 ம் தேதி மோத உள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் சென்னை அணி ஈடு பட்டு கொண்டு வரும் நிலையில் தற்போது சென்னை அணியின் பயிற்சி முகாமில் இலங்கையில் உள்ள 17-வயதான கல்லூரி மாணவரான குகதாஸ் மதுலன் இந்த பயிற்சியில் இணைந்து இருக்கிறார்.

Read More :- அப்போ இது உண்மை தானா ? பிசிசிஐ எடுத்தது தவறான முடிவா ?

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் குகதாஸ் மதுலன், இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான லசித் மலிங்காவை போல பவுலிங் ஸ்டைலில் பந்து வீசுபவர் ஆவார். இலங்கையில் உள்ள ஜாஃப்னாவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு போட்டியில் குகதாஸ் மதுலன் மலிங்கா ஸ்டைலில் யாக்கர் பந்தை வீசிய வீடியோவை பார்த்து சிஎஸ்கே நிர்வாகம் அவரை சென்னை அணிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், சென்னையின் கேப்டனான தோனி மதுலனின் பவுலிங்கை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Read More :- IPL 2024 : இதுலயும் ‘தல’ தான்பா ஃபஸ்டு ..! ஆனா ரன்ஸ் எவ்ளோன்னு தெரியுமா ..?

சென்னை அணியில் ஏற்கனவே இலங்கை அணியின் இளம் பந்து வீச்சளரான மதிஷா பத்திரனாவும் இருக்கிறார். அவரும் மலிங்காவை போல பந்து வீசும் ஸ்டையிலை கொண்டவர் ஆவார்.  இதில் என்ன சிக்கல் என்றால் கடந்த, மார்ச்-6ம் தேதி அன்று வங்காளதேச அணியோடு நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் மதிஷா பத்திரனாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதல் இரண்டு வாரங்கள் நடைபெற இருக்கும் சென்னை அணிக்கான போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Read More :- IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..!

தற்போது, சிஎஸ்கே நிர்வாகம் குகதாஸ் மதுலனை இந்த வருடம் அவரை பத்திரனாவுக்கு பதிலாக சென்னை அணி எடுப்பார்களா இல்லை அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு அவரை தயாராக்குவார்களா என்பதெல்லாம் தற்போது வரை தெரியாது. ஒருவேளை அடுத்த வருடம் 2025 ஆண்டின் ஐபிஎல் தொடரில் குகதாஸ் மதுலன் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றால் சென்னை அணியில் மலிங்கா ஸ்டைலில் யார்கரை வீச இரண்டு மலிங்கா இருப்பார்கள் என்று சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment