திமுக தேர்தல் அறிக்கையுடன் கலைஞர் நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை.!

வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் முக ஸ்டாலின்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகிய நிறைவடைந்ததை அடுத்து, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, நேற்று வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது இன்றைக்கு திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என கூறியிருந்தார்.

அந்தவகையில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் திமுக தேர்தல் அறிக்கையை வைத்து முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தேர்தல் அறிக்கை இன்று காலை 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்