முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

mk alagiri

வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அதாவது, 2011ம் ஆண்டு மதுரை வேலூர் அருகே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டபோது மு.க.அழகிரி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அதிமுக தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து உள்ளிட்டோர் அங்கு சென்று வீடியோ எடுத்ததாகவும், இதற்கு மு.க.அழகிரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாக்கியதாகவும் கூறப்பட்டது.

செந்தில் பாலாஜி கோரிக்கை ஏற்க மறுப்பு!

இதுதொடர்பாக தாசில்தார் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முக அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், தற்போது 17 பேர் மட்டுமே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மு.க. அழகிரிக்கு ஜாமீன் கிடைத்ததால், அவ்வப்போது, குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

இந்த சூழலில், கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த விசாரணை, அண்மையில் முடிவடைந்தது. இதனால், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உள்ளிட்ட 17 பேர் மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர்களை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி தீர்ப்பு வழங்கினார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *