பொங்கல் பரிசில் கரும்பு இல்லாததற்கு ஈபிஎஸ் கண்டனம்..!

பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் குடியிருப்போருக்கு வரும் 2023 பொங்கல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப்பணம் , 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் பொங்கல் பரிசு அறிவிப்பில் கரும்பு இடம்பெறாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதன்படி பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவார்கள் என எண்ணி விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்தனர். அரசின் அறிவிப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது.

எனவே பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment