கூகுள் தலைமை செயல் அதிகாரி சந்தர் பிச்சை அனுப்பிய அவசர மெயில்..!என்னவாக இருக்கும்??

யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ப்ரூனோ பகுதியில் யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வந்த பெண் ஒருவர் திடீரென துப்பாக்சிச் சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

பின், துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது தொடர்பாக சான் ப்ரூனோ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, “இது வார்த்தைகளால் கூறிவிட முடியாத அளவிற்கு மிகவும் வருத்தமளிக்கிறது. நம் அரசு பாதுகாப்புப்படை வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். வன்முறை சம்பவத்தால் ஒருவர் இறந்திருக்கிறார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். நீங்கள் இன்னமும் அதிர்ச்சியில் மீண்டிருக்கமாட்டீர்கள். கூகுள் குடும்பமான அனைவரும் இந்த மோசமான சம்பவத்திலிருந்து மீண்டு வர முயற்சிப்போம்”. என்று கூறியுள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment