“ஊழல் செய்வதில் திமுக முதன்மை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில்,திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம்,கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர் என்றும்,ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான கிரிராஜன்,ராஜேஷ்குமார்,கல்யாணசுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இருதினங்களுக்கு முன்னர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.மேலும்,சற்று முன்னதாக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ப.சிதம்பரம் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து,இரு மாநிலங்களவை இடங்களுக்கான அதிமுக வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,தர்மர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு ஓபிஎஸ்,ஈபிஎஸ் முன்னிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில்,ஊழல் செய்வதில் திமுக முதன்மையாக விளங்குகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:”

ஊழல் செய்வதில் முதன்மை,லஞ்சம் பெறுவதில் திமுக அரசு முதன்மையாக விளங்குகிறது.குறிப்பாக,எது கிடைக்கிறதோ? இல்லையோ?,தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்பனை அமோகம்.இதில் திமுக அரசு சாதனை.இதனால் மாணவர்கள் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில்,தமிழகம் முழுவதும் சுமார்,2200 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும்,அதில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மையில் முதல்வர் தாக்கல் செய்த காவல்துறை மானியக் கோரிக்கை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள் கஞ்சாவை கட்டுப்படுத்தவதற்காக ஆபரேசன் கஞ்சா 2.O மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.குறிப்பாக,இன்றைய தினம் மருத்துவத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடிபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால்தான் கஞ்சா விற்பனை தடை செய்யப்படும்,இளைஞர்கள்,மாணவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.இது குறித்து ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவினர் பேசினோம்.ஆனால் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.திமுக அரசு ஓராண்டில் ஒன்றும் செய்யவில்லை.திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.இந்த ஆட்சி எப்போது முடியும் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment