திமுக கூட்டணியில் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது.!

சட்டபேரவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் 25, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1 ஆகிய 60 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது.

இதன்பிறகு கூட்டணியில் உள்ள கட்சிகளை அழைத்து, எந்தெந்த தொகுதிகள் என்று நேற்று ஆலோசனை நடத்தப்பட்டு, ஒரு சில கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் தங்களது தொகுதிகளை குறித்து அறிவித்தனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களும் இன்று வெளியாக உள்ளது.

தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகள் குறித்து இழுபறி நீடித்ததால், தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, அதிமுக கூட்டணியில் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் முழு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் 70 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்