செயற்கை கால் பொறுத்துவதற்கான முழு செலவையும் திமுக ஏற்கும் – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுராதா பெற்றோரை  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லுர் பகுதியை சேர்ந்த அனுராதா என்ற பெண் தான் வேலை செய்யும் சின்னியம்பாளையத்திற்கு செல்லும் வழியில் கோல்டுவின்ஸ் சாலையில் செல்லும்போது அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பம் விழுந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதி காலில் பலத்த அடிபட்டது. இதனை அடுத்து அந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுராதா பெற்றோரை  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.அப்போது காயமடைந்த அனுராதாவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில் அதை வைத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை.லாரி ஓட்டுநர் மட்டுமே கைது .அனுராதாவிற்கு செயற்கை கால் பொறுத்துவதற்கான முழு செலவையும் திமுக ஏற்கும் எனவும் ஸ்டாலின் அறிவிப்பு