தலைமைத் தேர்தல் ஆணையம் வரை சென்று விசில் அடித்த குக்கர்!

டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கில்  உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில்  வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றார்.
அதே சின்னத்தை தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும் தமது அணியினருக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையமே நடத்துவதால், அதில் தாங்கள் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்குவது சாத்தியமில்லை என கூறியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், டி.டி.வி.தினகரனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment