தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு…!3 பேர் விடுதலை ஏன் விடுதலை…! 3 பேரும் சட்டப்படியே விடுதலை …! ஆளுநர் மாளிகை விளக்கம்

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை ஏன் விடுதலை என்று  ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஒட்டல் முன்னாள் ஜெயலலிதாவுக்கு ஒரு வருட  சிறை தண்டனை விதிக்கப்பட்டது .அப்போது கோவை  விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்துக்கு  தருமபுரி அருகே அதிமுகவினர் தீ வைத்தனர்.இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Image result for ஆளுநர் மாளிகை

இந்நிலையில் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை ஏன் விடுதலை என்று  ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.அதில்  மூவரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு பரிந்துரை செய்தது. மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.கொலை  செய்யும் நோக்கத்தில் வன்முறையில் ஈடுபடவில்லை என தலைமை வழக்கறிஞரும் ,தலைமை செயலாளரும் கூறினர். 3 பேரும் சட்டப்படியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவின் படி, அவர்கள் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.3 பேரை சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்று தமக்கு திருப்தி ஏற்பட்டதாக ஆளுநர் மாளிகை  விளக்கம் அளித்துள்ளது..

Leave a Comment