கொரோனாவுக்கு கொட்டு வைத்த டெல்லி மக்கள்,1568 பேர் பாதிப்பு ,156 உயிரிழப்பு,நேர்மறை 2.14% ஆக குறைவு

இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா காட்டுத்தீ போல் பரவிவந்தது,இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.அம்மாநில அரசு மேற்கொண்ட கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்  பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளது.

இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோன பாதிப்பு பதிவாகியுள்ளது, அங்கு கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 1,568 ஆக பதிவாகியுள்ளது, மேலும் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,565 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலான கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,19,986 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நேர்மறை விகிதம் மேலும் 2.14% ஆக குறைந்துள்ளது.

இன்று மட்டும் 4,251 பேர் குணமடைந்தநிலையில், இதுவரை 13,74,682பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும் 21,739 பேர் தற்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று 73,000 க்கும் மேற்பட்ட (73,406 துல்லியமான) சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 47,494 ஆர்டி-பி.சி.ஆர் / சி.பி.என்.ஏ.ஏ.டி / ட்ரூநாட் சோதனைகள், மீதமுள்ள 25,912 விரைவான ஆன்டிஜென் சோதனைகள் என்று சுகாதாரத் துறையின் புல்லட்டின் காட்டுகிறது.

author avatar
Dinasuvadu desk